Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காதலனை கரம்பிடிக்க பாகிஸ்தான் அரசாங்கத்திடம் நியூயார்க்கைச் சேர்ந்த பெண் ஒருவர் நூதன கோரிக்கை வைத்துள்ளார்.
காதல்
நியூயார்க் நாட்டை சேர்ந்த 33 வயதான ஒனிஜா ஆண்ட்ரூ ராபின்சனுக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த நிடல் அகமது (19 வயது) என்ற இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகிப் பழகி வந்துள்ளனர்.ஒரு கட்டத்தில் இவர்களது பழக்கம் காதல் மாறி திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவெடுத்துள்ளனர்.
இதற்காக நியூயார்க்கிலிருந்து ஒனிஜா ஆண்ட்ரூ ராபின்சன் பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். அப்போது நிடல் அகமதுவின் பெற்றோரிடத்தில் தங்களது உறவு குறித்துத் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இவர்களது உறவை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து நிடல் அகமது வீட்டிலிருந்து வெளியேறி ஒனிஜா ஆண்ட்ரூ ராபின்சன் ,’100000 டாலர்கள் வேண்டுமென்று பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவரிடம் விசாரித்த போது,’’பாகிஸ்தான் அரசாங்கத்திடம் நான் $100000 கேட்டுள்ளேன்.
பாகிஸ்தானுக்கு வந்த சோதனை
இந்த பணத்தை வைத்து பாகிஸ்தானைப் புனரமைக்கப் போவதாகக் கூறியுள்ளார். மேலும் இங்குள்ள தெருக்கள் மிகவும் ஆபத்தாக உள்ளது. எனக்கு அது பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு புதிய பேருந்துகள், டாக்சிகள் மற்றும் கார்கள் தேவை என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஒனிஜா ஆண்ட்ரூ ராபின்சனின் மகன் கூறுகையில் எனது தாயார் மனநல கோளாறால் அவதிப்படுகிறார்.பாகிஸ்தானிலிருந்து அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல நாங்கள் படாதபாட்டுப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த சம்பவம் பாகிஸ்தானில் பேசுபொருளாகியுள்ளது.