பிறந்து குழந்தையை Facebook-ல் விற்க முயன்ற தாய் - சில மணி நேரங்களில் நடந்த சம்பவம்!
பிறந்த பச்சிளம் குழந்தையை ஃபேஸ்புக்கில் தாய் விற்க முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
குழந்தை
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஜூனிபர் பிரைசன். 21 வயதாகும் இவருக்கு அன்மையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இதனையடுத்து தத்தெடுப்பவர்களுக்காக பிரத்தியேகமாக இருக்கும் ஆன்லைன் சோஷியல் மீடியா குரூப்பில் “Mother who gave birth, looking for adoptive parents”என்ற கேப்ஷன் கொடுத்துப் பிறந்த தன் குழந்தையின் புகைப்படத்தை ஜூனிபர் பிரைசன் வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக்
இந்த பதிவு வெளியான சில நேரங்களில் பல ஓரினச்சேர்க்கை தம்பதிகள் மற்றும் பலர் அந்த குழந்தையைத் தத்தெடுப்பதில் தங்களுக்கு ஆர்வத்தைத் தெரிவித்தனர். ஆனால் ஜூனிபர் பிரைசன் குழந்தையைத் தத்தெடுப்பவர்களிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தையை மீட்டனர். அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக ஜூனிபர் பிரைசனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.