தாயின் கொடூரச் செயல் - சொந்த குழந்தையை அடித்து, சூடு வைத்து சித்திரவதை!
சொந்த தாயே குழைந்தையை வீட்டில் சிறை வைத்து சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூரச் செயல்
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள வீரபத்ரநகரில் ஆயிஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் இம்ரான் கண் என்பவரை காதலித்தனு திருமணம் செய்துள்ளார். திருமண வாழ்க்கையில் தகராறு ஏற்பட்டதால் கணவரிடம் இருந்து பிரிந்து தனது 3 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த 3 வயது குழந்தையை ஆயிஷா வீட்டில் அடைத்து வைத்து உணவளிக்காமல், கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள், மற்றும் மகளிர் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில், காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தையான இம்ரான் கான் புகார் அளித்துள்ளார். அதில், தன்னுடைய மகளை, ஆயிஷாவும், அவரது கள்ளக்காதலன் சலீம் ஜாபீர் இருவருமே துன்புறுத்துவதாக புகார் தந்துள்ளார்.
அதிர்ச்சி சம்பவம்
"என் மகளை அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள்.. சிகரெட்டால் உடம்பில் சூடு வைத்திருக்கிறார்கள்.. அவரது காதலன் சலீம், சிகரெட்டால் குழந்தைக்கு சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். குளிர் சாதனப் பெட்டியில் இருந்து, ஐஸ் வாட்டரை எடுத்து, குழந்தை மீது ஊற்றியிருக்கிறார்கள்.
குழந்தையை உடம்பெல்லாம் ஆயிஷா கடித்து வைத்திருக்கிறார். அடித்தும் துன்புறுத்தியுள்ளார். இதை வெளியே சொன்னால் உன்னையும், உன் அப்பாவையும் கொன்றுவிடுவதாக ஆயிஷாவும், சலீமும் மிரட்டியிருக்கிறார்கள்.
இதனால் பயந்து போன குழந்தை, தனக்கு நடக்கும் சித்ரவதை குறித்து என்னிடம் சொல்லவில்லை. ஆனால், நாளுக்கு நாள் துன்புறுத்தல் அதிகமானதால் என்னிடம் குழந்தை கூறியுள்ளார்.
எனவே, இந்த புகாரின் அடிப்படையில் குழந்தையை அடித்து சித்ரவதை செய்த ஆயிஷா, அவரது காதலன் சலீம் ஜாபீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஆயிஷா, அவரது காதலன் சலீம் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசரணையை மேற்கொண்டு வருகின்றனர்.