மருமகளை கோமியம் குடிக்கச் சொல்லி சித்திரவதை செய்த கணவன், மாமியார் - அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

arrest Husband Torture dowry mother-in-law 7 year Prison
By Nandhini Feb 09, 2022 10:32 AM GMT
Report

வரதட்சணை கொடுமையின் உச்சமாக மருமகளை கோமியம் குடிக்கச் சொல்லி சித்திரவதை செய்ததால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு, சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த மரியானாவுக்கும், மனநல மருத்துவராக பணிபுரிந்து வந்த அமலி விக்டோரியாவிற்கும் திருமணம் நடந்தது. 2007ம் ஆண்டு இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து, மாமியார் வீட்டில் அமலியிடம் வரதட்சணை கேட்டு கணவனும், மாமியாரும் கொடுமை செய்து வந்துள்ளனர். இவர்களின் கொடுமை தாங்க முடியாமல், கடந்த 2014ம் ஆண்டு வீட்டின் கழிவறையில் அமலி தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கணவர் மரியானோ, மாமியார் அல்போன்சா மற்றும் மாமனார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் 3 பேரும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

மேலும் 2வது குழந்தை பிறக்க வில்லை என்பதற்காக சிறப்பு பூஜை நடத்தி மாட்டு கோமியத்தினை குடிக்க வைத்து சித்திரவதை செய்ததையும் ஒப்புக் கொண்டனர். போலீசார் இவர்களை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மரியானா மற்றும் மாமியார் அல்போன்சா ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மாமனாரை இந்த வழக்கிலிருந்து நீதிபதி விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து மரியானா மற்றும் அவருடைய அல்போன்சா 2 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அமலி தற்கொலை செய்து கொள்ள மாமியாரும், கணவரும் காரணமாக இருப்பது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனால் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது என்று சொல்லி இந்த வழக்கை தள்ளுபடி செய்து மரியானா அல்போன்சா இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்துள்ளார். வரதட்சனை கொடுமையால் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், 7 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மருமகளை கோமியம் குடிக்கச் சொல்லி சித்திரவதை செய்த கணவன், மாமியார் - அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் | Dowry Torture Husband Mother In Law Arrest