மகனை கொடூரமாக கொன்று பிணத்தின் அருகில் அமர்ந்திருந்த தாய் - அதிர்ச்சி வாக்குமூலம்!

India Crime Death Murder
By Jiyath Jun 11, 2024 07:16 AM GMT
Report

பெற்ற தாயே தனது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மகன் கொலை 

திரிபுரா மாநிலம் அகார்தலாவில் உள்ள ஜோயாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபர்ணா பால். இவரது கணவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது 9 வயது மகனுடன் அந்த பெண் தனியாக வசித்து வந்தார்.

மகனை கொடூரமாக கொன்று பிணத்தின் அருகில் அமர்ந்திருந்த தாய் - அதிர்ச்சி வாக்குமூலம்! | Mother Strangled Her 9 Year Old Son

இந்நிலையில் நேற்று தனது மகனை கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர் மகனின் பிணத்துக்கு அருகிலேயே பிரம்மை பிடித்து அமர்ந்திருந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

82 வயது மாமனாரின் ரூ.300 கோடி சொத்து - மருமகள் செய்த காரியம் - அதிர்ச்சி!

82 வயது மாமனாரின் ரூ.300 கோடி சொத்து - மருமகள் செய்த காரியம் - அதிர்ச்சி!

அதிர்ச்சி வாக்குமூலம்        

இதனை தொடர்ந்து, தானே தனது மகனை கொன்றதாக சுபர்ணா பால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தனது சொல் பேச்சை மகன் கேட்பதில்லை என்றும் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்பதால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறினார்.

மகனை கொடூரமாக கொன்று பிணத்தின் அருகில் அமர்ந்திருந்த தாய் - அதிர்ச்சி வாக்குமூலம்! | Mother Strangled Her 9 Year Old Son

மேலும், வீட்டிலிருந்த பணத்தை தனது மகன் திருடியதால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். பெற்ற தாயே தனது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.