அம்மாவ கவனிக்கணும் : அமலாக்கத்துறையில் அவகாசம் கேட்ட ராகுல்காந்தி

Nationalist Congress Party Rahul Gandhi Sonia Gandhi
By Irumporai Jun 16, 2022 12:43 PM GMT
Report

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை நேற்று 3-வது நாளாக விசாரணை நடத்தியது.

விசாரணை வளையத்தில் ராகுல்

இந்த விசாரணையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி நிர்வாக இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையின் நேற்று 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். 3 நாட்கள் நடந்த விசாரணையில் ராகுல்காந்தியிடம் மொத்தம் 28 மணி நேரத்திற்கு மேல் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளனர்.

அம்மாவ கவனிக்கணும் : அமலாக்கத்துறையில் அவகாசம் கேட்ட ராகுல்காந்தி | Mother Sonia In Hospital Rahul Gandhi

அதேவேளை, கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை கவனிக்க வேண்டும் என ராகுல்காந்தி கோரிக்கை விடுத்ததால் இன்று ஒரேநாள் மட்டும் விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, வழக்கு விசாரணைக்காக வெள்ளிக்கிழமை மீண்டும் ஆஜராகும்படி அமலாக்கத்துறை ராகுல்காந்திக்கு நேற்று சம்மன் அனுப்பியிருந்தது.

அம்மாவ கவனிக்கணும் : அமலாக்கத்துறையில் அவகாசம் கேட்ட ராகுல்காந்தி | Mother Sonia In Hospital Rahul Gandhi

கோரிக்கை வைத்த ராகுல்

இந்நிலையில், நேஷனல் ஹேரால்டு வழக்கு விசாரணையில் நாளை ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி அமலாக்கத்துறையிடம் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பாதித்துள்ள தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாலும் அவரை கவனிக்க வேண்டும் என்பதாலும் நாளை விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

 ராகுல்காந்தியின் கோரிக்கை தொடர்பாக அமலாக்கத்துறையிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நேஷனல் ஹெரால்டு வழக்கு :ராகுல் காந்தியிடம் மூன்றரைமணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள்