மாமியார் பயன்படுத்திய டூத் பேஸ்ட்டால் வந்த வினை - விவாகரத்தில் முடிந்த சுற்றுலா
அனுமதியின்றி மாமியார் தன் டூத் பேஸ்ட்டை பயன்படுத்தியது விவாகரத்தில் சென்று முடிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா
பெயர் குறிப்பிடாத ரெட்டிட்(Reddit) பயனர் சுற்றுலாவின் போது மாமியார் தன் டூத் பேஸ்ட்டை பயன்படுத்திய சம்பவம் விவாகரத்து வழிவகுத்தள்ளதை ரெட்டிட் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவில், 38 வயதான அவர் எனது 35 வயது மனைவியுடன் இத்தாலியில் உள்ள வெனிஸ் நகருக்கு ரொமான்டிக் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தேன். எங்களது 5 வயது மகளை மாமியார் வீட்டில் விட்டு செல்ல முடிவு செய்திருந்தோம்.
மாமியார்
இதை எனது மாமியாரிடம் தெரிவித்த போது, வெனிஸ் நகருக்கு செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு எனவே தானும் வருவதாக கூறினார். இதற்கு எனது மனைவியும் ஆதரவாக இருந்தார். ஆனால் நான் மிகவும் தயக்கம் காட்டினேன்.
மேலும் அங்கு இரு அறைகளை முன் பதிவு செய்து நானும் என் மனைவியும் ஒரு அறையிலும், மாமியாரும் என் மகளும் ஒரு அறையில் தங்குவதாகவும் திட்டமிட்டிருந்தேன். ஆனால் என் மனைவி ஒரே அறையை முன் பதிவு செய்து விட்டார். இது ஒரு காதல் பயணமாக இருக்க நான் திட்டமிட்டேன், எனவே என் மகள் எங்களுடன் அறையில் இருக்க விரும்பவில்லை.
மேலும், மாமியார் தொடர்ந்து எங்கள் அறையில் இருந்ததால், என் மனைவியின் விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தையும் (ஃபேஸ்வாஷ், ஷாம்பு, லோஷன் போன்றவை) அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக நானும் என் மனைவியும் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை அவர் பயன்படுத்தியது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அப்பொழுதும் எனக்கு உடல்நலக்குறைவாக வேறு இருந்தது. பல முறை என் மனைவியின் பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என அமைதியாக கூறியும் அவர் கேட்கவில்லை.
விவாகரத்து
நீங்கள் எதற்காக எங்களுடன் வந்தீர்கள் விமான செலவை தவிர எதற்கும் நீங்கள்பணம் அளிக்கவில்லை என கேட்டேன். மிகவும் வருத்தமடைந்த என மாமியார் இதை என் மனைவியிடம் கூறினார். இதை கேட்டு கோபம் அடைந்த என் மனைவி என்னிடம் கத்தினார். எனது சொந்தப் பணத்தில் நான் திட்டமிட்ட பயணம் இப்படி பாழாகிவிட்டதே என மிகவும் கோபமடைந்த நான், எனது விமான டிக்கெட்டின் தேதியை மாற்றிக்கொண்டு நேராக வீட்டிற்குச் சென்று விட்டேன்.
அதன் பின் பலமுறை என்னை தொலைபேசியில் அழைத்த என் மனைவி எங்கள் மகள் மனமுடைந்துவிட்டதாகக் கூறி என்னைக் கத்தினாள். எங்கள் மகள் இந்தச் சூழ்நிலையில் சிக்கிக் கொண்டதை நான் வருத்தமாக உணர்ந்தேன். எனது சொந்த மனநலத்திற்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள் என கூறி அவரது அழைப்புகளைபுறக்கணித்து வந்தேன்.
இதன் பின் மன்னிப்பு கேட்க என் மனைவியை அழைத்த போது, அவள் என்னை ஏற்கனவே ப்ளாக் செய்திருக்கிறாள். அவள் விவாகரத்து செய்யும் முடிவில் உள்ளதாக என் ,மாமியார் தெரிவித்தார். தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் நான் தவிக்கிறேன். ஒரு கணவனாக, தந்தையாக நான் தோல்வியடைந்துவிட்டேன். இந்த முடிவிற்காக என் மனைவி மீது எனக்கு கோபம் இல்லை, ஆனால் என்னால் இதை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் இன்னும் உள்ளது. இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தற்போது நான் மனநல சிகிச்சை எடுக்கும் நிலையில் உள்ளேன் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.