திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து - ஏன் தெரியுமா?
திருமணமாகிய 3 நிமிடத்தில் விவாகரத்தாகிய வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.
குவைத்
2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு திருமணம், மணப்பெண் தோழிகளுக்கு மணமகன் வழங்கிய சிற்றுண்டியால் ஏற்பட்ட பிரச்னையால் 90 நிமிடத்தில் விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதே போல் குவைத் நாட்டில் திருமணம் முடிந்த 3 நிமிடத்தில் விவாகரத்தும் நடந்து முடிந்த வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. எல்லா எதிர்பார்ப்புகளுடனும் அந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.
விவாகரத்து
திருமண நிகழ்ச்சிகள் முடிந்து மணமக்கள் வீட்டிற்கு கிளம்ப தயாரான போது, மணமகள் கால் தவறி கீழே விழுந்தார். அப்போது மணமகன், `பார்த்து நடக்கத்தெரியாதா முட்டாள்' என்று திட்டிவிட்டார். இதனால் மணப்பெண் மனம் உடைந்தார். காலமெல்லாம் இவருடன் எப்படி வாழப்போகிறோம் என்று அதிர்ச்சி அடைந்தார்.
உடனே நீதிமன்றத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி தங்களுக்கு விவாகரத்து வேண்டுமென வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றமும் அவரது கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்கியது. இது அந்த நாட்டில் நடந்து முடிந்த மிக குறுகிய திருமண பந்தம் என கூறப்படுகிறது.
இந்த திருமணம் 2019 ம் ஆண்டு நடைபெற்றுள்ளது. இதுபற்றிய செய்தி தற்போது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. "மரியாதையற்ற உறவுகள் ஆரம்பத்திலேயே முடிவடைந்துவிடும்" என்று சிலர் இதற்கு ஆதரவாகவும், "விட்டுக்கொடுப்பும் அனுசரிப்பும் திருமண வாழ்வில் அவசியம் என சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.