புதுப்பெண் தற்கொலை; ஆடியோவால் பகீர் - மாமியார் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
கைது நடவடிக்கைக்கு பயந்து பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மருமகள் இறப்பு
கன்னியாகுமரி, சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மின்சார வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ருதி. இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் கல்யாணம் நடந்துள்ளது.

தொடர்ந்து, கணவருடன் வசித்துவந்த ஸ்ருதி, திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். உடனே, இது தொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
மாமியார் தற்கொலை முயற்சி
அப்போது, தற்கொலைக்கு முன்பு, வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றை ஸ்ருதி அவரது அம்மாவிற்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. அதில் மாமியார் கொடுமை செய்வதாகவும், எனக்கு வாழாவெட்டியாக வீட்டிற்கு வந்து இருப்பதில் விருப்பம் இல்லாததால் தற்கொலை செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில், கைதுக்கு பயந்து மாமியார் செண்பகவல்லி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு அவரது உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள் IBC Tamil
இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துல்லிய தகவல் IBC Tamil
ராகுவின் நட்சத்திர மாற்றம்: 2027 ஏப்ரல் வரை இந்த ராசிகளின் நிதி முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது! Manithan