சாலையில் ரத்தமும், சதையுமாக சிதறிய என்ஜினீயரிங் மாணவி- சிறு தவறால் நேர்ந்த கொடூரம்!
கழிவுநீர் லாரி மோதி என்ஜினீயரிங் மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை
சென்னையைச் சேர்ந்தவர் 19 வயதாகும் கேத்தரின். இவர் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கேத்தரின் மற்றும் அவரது தோழியான லிஸ்வந்தி இவரும் நேற்று பிற்பகல் இருசக்கர வாகனத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலைக்குக் கலைஞர் கருணாநிதி சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.
பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் மீது சென்றபோது எதிர் திசையில் திடீரென இருசக்கர வாகனம் வந்தது. அதற்கு வழி விடுவதற்காக வலது பக்கத்தில் இருசக்கர வாகனத்தை மாணவிகள் சிறிது நகர்ந்துள்ளார்.அப்போது திடீரென ஓரம் போனதால், பின்னால் வந்த கழிவுநீர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது.
என்ஜினீயரிங் மாணவி
இதில் நிலை தடுமாறி கேத்தரின் கீழே விழுந்ததில் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். மற்றொரு மாணவி லிஸ்வந்தி படுகாயம் அடைந்தார்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் நீலாங்கரை போக்குவரத்து காவல்துறை சம்பவ இடத்துக்குச் சென்று பலியான கல்லூரி மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கல்லூரி மாணவி பலியான சம்பவம் கல்லூரி மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.