நோ பார்க்கிங் பகுதியில் செல்லக்கூடாது.. செக்யூரிட்டி மீது சராமாரி தாக்குதல் - பதைபதைக்கும் விடியோ!
பொதுவாகச் சாலை விதிமுறைகளின் படி, நோ பார்க்கிங் போட்டிருந்தால், அந்த பகுதியில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும்.
தாக்குதல்
நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தக்கூடாது எனத் தடுத்து நிறுத்திய (செக்யூரிட்டி) காவலாளியைப் பெண் உட்பட 4 பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங் வழியே சென்ற காரை காவலாளி (செக்யூரிட்டி) ஒருவர் தடுத்து நிறுத்தி உள்ளார்.ஆனால், அதையும் மீறி அந்த சாலையில், காரில் வந்த 4 பேர் தங்களுடைய வாகனத்தை இங்கே தான் நிறுத்துவோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவலாளி (செக்யூரிட்டி) காரை தடுத்து நிறுத்தியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த காரில் இறங்கிய பெண் ஒருவர் வேகமாகக் காவலாளி (செக்யூரிட்டி) கன்னத்தில் அறைந்தார். இதனைக் கண்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் காரில் இருந்த இறங்கி காவலரைச் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வீடியோ காட்சிகள்
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கண்டனங்கள் எழுந்தனர். மேலும் இந்த வீடியோ காட்சிகளை வைத்து,2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரம் வெளியாகும் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.