2 ஆயிரம் கிலோ மீன்களை அழித்த இளைஞர்கள் - நீடிக்கும் மர்மத்தின் பின்னணி என்ன?
முதுகுளத்தூர் அருகே கண்மாயில் வளர்ந்த இரண்டு ஆயிரம் கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை இளைஞர்கள் பிடித்து அழித்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே பொதுக் கண்மாய் ஒன்று உள்ளது. இதில் கடந்த ஆண்டு பெய்த மழை நீரில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அடித்து வரப்பட்டது. தற்பொழுது கண்மாய் முழுவதும் மீன்கள் வளர்ந்து அதிகளவில் காணப்பட்டன.
இதனால் கண்காயில் வளரக்கூடிய நாட்டு இனத்தைச் சார்ந்த நன்னீர் மீன்கள் உற்பத்தியாகாமலிருந்தது தெரியவந்தது. இந்நிலையில் கண்மாய் நீர் வற்றிய நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம இளைஞர்கள் சேற்றில் கிடந்த இரண்டு ஆயிரம் கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை பிடித்தனர்.
இந்த கெளுத்தி மீன்கள் ஒவ்வொரு மீனும் சுமார் ஐந்து கிலோவுக்கு மேல் எடை கொண்டதாக இருந்தது. பின்னர் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் குழி தோண்டி மூடி அழித்தனர். ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.
மீன்கள் அழிப்பு
இந்த மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். இவை இடைவிடாமல் மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை.மேலும் இந்த வகையான மீன்கள் ஏரி மற்றும் ஆறுகளில் சென்று,
பிற மீன் இனங்களை அழிப்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர, மற்ற பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் நிலை உருவாகும் என அப்பகுதியைச் சேர்ந்த கிராம இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.