சொந்த மகன் என்று கூட பாராமல் தாய் செய்த கொடூரம்; மிரண்டுபோன தந்தை - viral வீடியோ!

Viral Video Social Media Haryana
By Swetha May 28, 2024 05:15 PM GMT
Report

மகனை அவரது தாய் கடுமையாக சித்ரவதை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாய் செய்த கொடூரம் 

ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 11 வயது மகனை கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்துள்ளார். தினந்தோறும் தனது மகனை அடித்து உதைப்பதுடன், அவர் மீது ஏறி அமர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளார். வேலைக்கு சென்ற அந்த பெண்ணின் கணவர் மாலையில் வீடு திரும்பியபோது,

சொந்த மகன் என்று கூட பாராமல் தாய் செய்த கொடூரம்; மிரண்டுபோன தந்தை - viral வீடியோ! | Mother Hits And Abuses His Son Video Vent Viral

சிசிடிவி காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அந்த வீடியோவில் தனது மனைவியே மகனை அடித்து உதைத்து சித்ரவதை செய்வதுடன் தகாத வார்த்தைகளால் திட்டுவதும் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த சிறுவனின் தந்தை,

பிஞ்சு குழந்தையை தாக்கிய கொடூர தாய் நீதிமன்றத்தில் ஆஜர் - தீர்ப்பு என்ன?

பிஞ்சு குழந்தையை தாக்கிய கொடூர தாய் நீதிமன்றத்தில் ஆஜர் - தீர்ப்பு என்ன?

viral வீடியோ

தனது மனைவியின் கொடூரமான நடத்தைக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வீடியோ தீயாய் பரவி வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோ காட்சிகளில், ஒரு பெண் தன் குழந்தையை அடிக்கும் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சிறுவனை உதைப்பதும், கையை முறிப்பதும் என காட்சிகள் அதில் இடம் பெற்றுளளன.

சொந்த மகன் என்று கூட பாராமல் தாய் செய்த கொடூரம்; மிரண்டுபோன தந்தை - viral வீடியோ! | Mother Hits And Abuses His Son Video Vent Viral

இந்த தாக்குதலின் போது தந்தை தலையிட்டு அவரது மகனை தாயிடமிருந்து காப்பாற்றும் காட்சிகளும் இடம் பெற்றள்ளன. இதை தொடர்ந்து, குழந்தைகள் நலக் குழுவின் (CWC) உத்தரவின் பேரில் சூரஜ்குண்ட் காவல் நிலையத்தில் சிறுவனைத் தாக்கிய தாய் மீது கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவனின் வாக்குமூலம் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூரஜ்குண்ட் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.