மாற்றுத்திறனாளியை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய பெண் - அதிர்ச்சி சம்பவம்!
திண்டுக்கல்லில் பெண் ஒருவர் மாற்றுத்திறனாளி நபரை கொடூரமாக தாக்கும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
ஊனமுற்றோர்
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே வசித்து வருபவர் சந்திரா.
இவரது கணவரின் அண்ணன் மகன் மணிகண்டன், இவர் ஒரு மாற்றுத்திறனாளி.
இவர் மாற்றுத்திறனாளி என்பதால் அரசிடம் இருந்து மாதம் தோறும் உதவித்தொகை பெற்று வருகிறார்.
மேலும் இவரின் பேரில் காலி வீட்டு மனை ஒன்றும் உள்ளது. இதனை கேட்டு அவரிடம் சண்டை போட்டு, கொடுமை படுத்தியுள்ளார்.
கொடுமை
இதனை தொடர்ந்து, மணிகண்டனுக்கு அரசிடம் இருந்து வரும் மாதாந்திர உதவித்தொகை மற்றும் அவர் பேரில் உள்ள காலி வீட்டு மனையையும் கேட்டு சந்திரா மணிகண்டனை அடித்து கொடூரமாகத் துன்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து அந்த பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.