ஒரே இளைஞரால் கர்ப்பமான தாய், மகள் - ஷாக் காதல் கதை!
ஒரே இளைஞரால் தாய், மகள் கர்ப்பமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
தாய் - மகள் கர்ப்பம்
டானி ஸ்விங்ஸ் என்கிற பெண் தனது டீனேஜ் வயதில் ஜேட் என்கிற மகளைப் பெற்றெடுத்தார். பின் ஜேடின் தந்தையிடமிருந்து பிரிந்த டானி,
44 வயதில் நிக்கோலஸ் யார்டி என்கிற நபருடன் உறவில் ஈடுபட்டார். மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதில், ஜேடும் நிக்கோலஸும் நெருக்கமாகி, காதலிக்கத் தொடங்கினர்.
வைரல் காதல் கதை
இதனால் தாயும், மகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ளனர். இதனை @xojadeteen என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோவாக பகிர்ந்துள்ளனர்.
அதில், “என் அம்மாவும், நானும் ஒரே ஆணால் கர்ப்பமாக இருக்கிறோம். எங்கள் குழந்தைகள் ஒரு வார இடைவெளியில் பிறக்க இருக்கிறார்கள். நான் தற்போது 34 வார கர்ப்பிணி” என்று மகள் கூறுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சமூக ஊடக பயனர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.