மனைவியை கயிற்றில் கட்டி தாக்குதல்; கணவன் வெறிச்செயல் - அதிர்ச்சி காட்சிகள்!
கணவன், மனைவியை கயிற்றில் கட்டி வைத்து தாக்கிய வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலறிய மனைவி
ஆந்திரா, கலுஜூவாலபாடு கிராமத்தை சேர்ந்தவர் குருநாதம். இவருக்கு திருமணமாகி மனைவி, மூன்று மகள்கள், மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் 4 குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக அருகில் உள்ள பேக்கரி ஒன்றுக்கு மனைவி வேலைக்கு சென்றுள்ளார்.
கணவன் வெறிச்செயல்
அந்த வேளையில், பல நாட்களுக்கு பின் திடீரென்று ஊர் திரும்பி குருநாதம் பேக்கரியில் வேலை செய்தது மூலம் கிடைத்த பணத்தை கொடு என்று கேட்டு மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால் அவருடைய மனைவி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குருநாதம் மனைவியின் கைகளை கட்டிப்போட்டு பெல்டால் கொடூரமாக அடித்து துன்புறுத்தியுள்ளார். உடனே அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் அவரை தடுக்க முயன்று தோல்வி அடைந்தனர்.
இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் குருநாதமை பிடித்து விசாரித்து வருகின்றனர்.