இளைஞர்களின் அந்தரங்கம்; ஸ்டேப்ளர் பின் அடித்து ரசித்த பெண் - குரூர சம்பவம்!
இளைஞர்களை கடத்தி,ஸ்டேப்ளர் பின் அடித்து ரசித்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்ஸ்டாவில் ஸ்கெட்ச்
கேரளா, சரல்குன்னு பகுதியில் வசித்து வருபவர் ரஷ்மி (23). இவருடைய கணவர் ஜெயேஷ் (29). ரஷ்மிக்கு ஆலப்புழை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின், அந்த இளைஞரை ரஷ்மி தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.தொடர்ந்து, அவருடைய வீட்டிற்கு அந்த இளைஞர் வந்துள்ளார்.
அப்போது இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தபோது திடீரென அங்கு மறைந்திருந்த ரஷ்மியின் கணவர் ஜெயேஷ் செல்போனில் இருவரும் உல்லாசமாக இருப்பதை படம் பிடித்துள்ளார்.
ஜோடி கொடூர செயல்
அதன் பின் இருவரும் அந்த இளைஞரின் இரு கைகளையும் கட்டி தொங்கவிட்டு இருவரும் சேர்ந்து அவருடைய மர்ம உறுப்பில் 26 ஸ்டேப்ளர் பின்களை அடித்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
இளைஞரின் கை விரல் நகங்களையும் பிடுங்கி வீசி, இறுதியாக இளைஞரை இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் போட்டு விட்டு சென்றுள்ளனர். அப்போது அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ரஷ்மி மற்றும் அவருடைய கணவர் ஜெயேஷை கைது செய்தனர். இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரஷ்மி சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இளைஞர்களிடம் பழகி ஆசை வார்த்தை கூறி வரவழைத்து பணம் பறிப்பது வாடிக்கையாக இருந்தது தெரிய வந்துள்ளது.