தகாத உறவால் வெடித்த பஞ்சாயத்து - போலீஸ் ஏட்டுவின் 16 வயது மகன் வெறிச்செயல்!
போலீஸ் ஏட்டு ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்த பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தகாத உறவு
தூத்துக்குடி, திரேஸ்நகரை சேர்ந்தவர் ராமசுப்பு.இவர் கர்நாடகாவில் செல்போன் கோபுரம் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சக்தி மகேஸ்வரி (38).
இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இதில் சக்தி மகேஸ்வரிக்கு சிப்காட் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் ஏட்டு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மகன் வெறிச்செயல்
இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இதனால் ஏட்டுவின் மனைவி பிரிந்து சென்றுள்ளார். தாய் பிரிந்து சென்றதற்கு சக்தி மகேஸ்வரிதான் காரணம் என்று போலீஸ் ஏட்டுவின் மகன் கருதி, தனது நண்பனுடன் சக்தி மகேஸ்வரி வீட்டுக்கு சென்றுள்ளார்.
[9V7YSA ]
அப்போது தனியாக இருந்த அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு, தப்பி ஒடிய இருவரையும் கைது செய்தனர்.