மண்டை ஓடு மூலம் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள் - 900 ஆண்டு பழசாம்..

England
By Sumathi Sep 18, 2025 12:50 PM GMT
Report

பெண்ணின் மண்டை ஓடு மூலம் விஞ்ஞானிகள் முகத்தை உருவாக்கியுள்ளனர்.

மண்டை ஓடு

இங்கிலாந்து, கெண்டல் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு நீர் மேலாண்மை பணிகள் தொடங்கியது. அதில் அங்குள்ள தேவாலயம் அருகே சில எலும்பு கூடுகள் கிடைத்தன.

மண்டை ஓடு மூலம் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள் - 900 ஆண்டு பழசாம்.. | Womans Face Constructed 900 Year Old Skull Viral

அதனை அதிகாரிகள் கைப்பற்றி தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர். பின் அவர்கள் நடத்திய ஆய்வில் அந்த எலும்பு கூடுகள் 900 ஆண்டுகள் பழமையானவை என்பது தெரியவந்தது.

மக்கள் வாயிலிருந்து இனி இந்த வார்த்தை வரவே கூடாது - அதிபர் வினோத உத்தரவு!

மக்கள் வாயிலிருந்து இனி இந்த வார்த்தை வரவே கூடாது - அதிபர் வினோத உத்தரவு!

மனித முகம்

இதற்கிடையே அங்கு கைப்பற்றிய ஒரு பெண்ணின் மண்டை ஓடு மறுகட்டமைப்புக்கு ஏற்ற நிலையில் இருந்தது. அதனை அப்பெண்ணின் முகம் எப்படி இருந்திருக்கும் என்பதை கண்டறியும் பணியில் லிவர்பூல் ஜார் மூர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

மண்டை ஓடு மூலம் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள் - 900 ஆண்டு பழசாம்.. | Womans Face Constructed 900 Year Old Skull Viral

தொடர்ந்து தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட அந்த பெண்ணின் முகம் கெண்டல் தேவாலயத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.