இந்த கப்பலில் டிக்கெட் விலை மட்டுமே ரூ.7 கோடி - இவ்வளவு காஸ்ட்லி ஏன் தெரியுமா?
மிகவும் விலையுயர்ந்த சொகுசுக் கப்பல் பயணத்தை அறிவித்துள்ளது.
ரீஜென்ட் செவன் சீஸ்
ரீஜென்ட் செவன் சீஸ் நிறுவனம் உலக வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த சொகுசு பயணத்தை அறிவித்துள்ளது.
2027ல் ஆரம்பிக்கும் இந்த டூர் மொத்தம் 170 நாட்கள் இருக்குமாம். 40 நாடுகள் வழியாக 71 துறைமுகங்களைக் கடக்கும் இந்தச் சுற்றுலா அமெரிக்காவின் மியாமியில் தொடங்குகிறது.
"வேர்ல்ட் ஆஃப் ஸ்ப்ளெண்டர்" (World of Splendor) என்ற பெயரில் அட்டகாசமான சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த முழுச் சுற்றுலாவுக்கு ஆரம்ப விலை கட்டணமே ரூ.80 லட்சமாம். அதிகபட்சமாக ரீஜென்ட் சூட்டிற்கு ₹7.3 கோடி வரை வசூலிக்கப்படுகிறது.
பயண விவரம்
ரூ.7.3 கோடி கொடுத்து ரீஜென்ட் சூட் டிக்கெட் எடுத்தால், உங்களுக்கென தனியாக கார் மற்றும் டிவைரர் என எல்லாமே கிடைக்கும். உங்களுடைய ரூம் 4,000 சதுர அடி கொண்டதாக இருக்கும். ரூமிலேயே ஸ்பா உட்பட வசதிகள் இருக்கும்.
விருந்தினர்கள் ஆறு கண்டங்கள் வழியாக 35,668 கடல் மைல்கள் (66,057 கி.மீ) பயணம் மேற்கொள்வார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ், சிட்னி, சிங்கப்பூர், மாலிபு மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களில் தங்கி, அந்த ஊர்களைச் சுற்றி பார்ப்பார்கள்.
இந்த கப்பலில் மொத்தமே 746 விருந்தினர்கள் மட்டுமே பயணிக்க முடியும். இந்தியாவில் இந்தியாவில் மும்பை, மங்களூரு, கொச்சி, கோவா ஆகிய நான்கு துறைமுகங்களில் நின்று செல்லும்.