மிக விலையுயர்ந்த பாஸ்போர்ட் உடைய நாடு எது தெரியுமா? அமெரிக்கா, இங்கிலாந்து அல்ல!
மிக விலையுயர்ந்த பாஸ்போர்ட்டை கொண்ட நாடு குறித்து பார்ப்போம்.
விலையுயர்ந்த பாஸ்போர்ட்
உலகின் மிக விலையுயர்ந்த பாஸ்போர்ட்களை மெக்சிகோ கொண்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.19,481.75. இந்த பாஸ்போர்ட் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும்.
அதன் 6 மற்றும் 3 ஆண்டு பாஸ்போர்ட்டுகள், நான்காவது மற்றும் ஒன்பதாவது மிகவும் விலை உயர்ந்ததாக மதிப்பிடப்படுகிறது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 10 ஆண்டுக்கான பாஸ்போர்ட் ரூ.19,041.
மலிவான பாஸ்போர்ட்
அமெரிக்காவின் 10 ஆண்டுக்கான பாஸ்போர்ட் விலை ரூ.13,868. உலகிலேயே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் மலிவான பாஸ்போர்ட் கிடைக்கிறது. ரூ.1,400 மட்டுமே செலவாகும். இது 10 வருடங்கள் செல்லுபடியாகும்.
இதற்கு அடுத்தப்படியாக இந்தியா இரண்டாவது மலிவான பாஸ்போர்ட்டாக உள்ளது. இங்கு பாஸ்போர்ட்-ன் விலை ரூ.1,524.95.
மேலும், கென்யா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுடன், ஹங்கேரி மற்றும் ஸ்பெயின் போன்ற சில ஐரோப்பிய நாடுகளிலும் உலகின் மிகக் குறைந்த விலையுள்ள பாஸ்போர்ட்கள் கிடைக்கின்றன.