உலகின் மிக விலை உயர்ந்த உணவு பொருட்கள் - எதெல்லாம் தெரியுமா?
உலகின் மிகவும் விலை உயர்ந்த உணவு பொருட்கள் குறித்து பார்க்கலாம்.
விலை உயர்ந்த உணவு பொருட்கள்
ஆடம்பர வகை உணவுகள் என சில வகையான உணவுப் பொருட்கள் உள்ளன. மாட்சுடேக் என்று அழைக்கப்படும் ஜப்பானிய காளான். ஒரு கிலோ ரூ. 1.5 லட்சம் வரை விற்பனையாகும்.
கடல் உணவு வகைகளில் ஒன்று அபலோன். இது ஒரு வகை கடல் நத்தை. உலகெங்கிலும் உள்ள கடலோர நீரில், குறிப்பாக பசிபிக் பெருங்கடலில் காணப்படுகிறது. இது இனிப்பு சுவை மற்றும் உப்பு சுவையின் கலவையாக இருக்கும். இதன் விலை $100 முதல் $200 வரை செலவாகும்.
பெலுகா கேவியர் என்பது முட்டைகள் கொண்ட கேவியர். காஸ்பியன் கடலில் இந்த மீன் முதன்மையாகக் காணப்படுகிறது. ஒரு கிலோ ரூ. 8 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ரூபி ரோமன் திராட்சைகள் ரூ.10 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையுயர்ந்த காபி என்று அழைக்கப்படும் கோபி லுவாக். சிவெட் பூனையின் எச்சில் இருந்து தயார் செய்யப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ. 2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
புளூஃபின் டுனா சுவை மற்றும் மென்மையான தன்மை காரணமாக ஏலத்தில் பல மில்லியன்களுக்கு விற்கப்படுகிறது.
குங்குமப்பூ உலகின் மிக விலையுயர்ந்த மசாலாப் பொருளாகும். ஒரு கிலோ 4.95 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.