உலகின் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியில் - சென்னை, மும்பைக்கு எந்த இடம் தெரியுமா?
இந்திய அளவில் செலவு மிகுந்த நகரமாக மும்பை முதலிடத்தில் உள்ளது.
செலவு மிகுந்த நகரங்கள்
உலகின் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலை மெர்சர் நிதி ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 226 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலானது அந்த நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை செலவினம் அடிப்படையில் வெளியாகியுள்ளது.
மேலும், பணவீக்கம், உள்நாட்டு வரி, சர்வதேச பொருளாதார சூழல், பொருட்களின் விலை, போக்குவரத்து ஆகியவை செலவு கூடுவதற்கு முக்கிய காரணிகளாக சொல்லப்படுகிறது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் ஹாங்காங், சிங்கப்பூர், சூரிச், ஜெனிவா, பாஸல், பெர்ன், நியூயார்க், லண்டன், நாசாவ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்கள் உள்ளன.
இந்திய நகரங்கள்
அதேபோல் செலவு குறைந்த நகரங்களாக ஹவானா, விண்ட்ஹோக், டர்பன், துஷான்பே, பிளாண்டயர், கராச்சி (பாகிஸ்தான்), பிஷ்கெக், இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்), லாகோஸ் மற்றும் அபுஜா ஆகிய நகரங்கள் உள்ளன.
இந்த பட்டியில் 136-வது இடத்தில் மும்பை, 165-வது இடத்தில் டெல்லி, 189-வது இடத்தில் சென்னை, பெங்களூரு (195), ஹைதராபாத் (202), புனே (205), கொல்கத்தா (207) ஆகிய இந்திய நகரங்கள் உள்ளன. இந்திய அளவில் செலவு மிகுந்த நகரமாக மும்பை முதலிடத்தில் உள்ளது.