உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் 2 இந்திய ரகரங்கள் - சென்னைக்கு எந்த இடம்?
உலகளவில் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியான நகரங்கள்
உலகளவில் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள 1,000 நகரங்களை, 'இன்ஸ்டிடியூட் ஃபார் குவாலிட்டி ஆஃப் லைஃப் இன் ஹேப்பி சிட்டி இன்டெக்ஸ்' என்ற அமைப்பு மதிப்பாய்வு செய்துள்ளது.
அதிலிருந்து, வாழ்க்கைத் தரம் மற்றும் குடியிருப்பாளர்களின் மகிழ்ச்சி உணர்வு போன்ற காரணிகளின் அடிப்படையில் 250 நகரங்களைத் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் 2024-ம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய 2 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
எத்தனையாவது இடம்?
இதில் பெங்களூரு 210-வது இடத்திலும், சென்னை 232-வது இடத்திலும் இடம்பிடித்துள்ளன. இந்த 2 நகரங்களும் குடிமக்கள், நிர்வாகம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் இயக்கம் ஆகிய 5 காரணிகளை வைத்து தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
மேலும், உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் டென்மார்க் நாட்டிலுள்ள ஆர்ஹஸ் நகரமும், கடைசி இடத்தில் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரமும் உள்ளது.