உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் - இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா..?

India
By Jiyath Jan 31, 2024 03:25 AM GMT
Report

இந்த ஆண்டுக்கான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது

ஊழல் மிகுந்த நாடுகள்  

உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை அரசு சாரா அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் - இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா..? | 180 Countries In Corruption Perceptions Index 2023

லஞ்சம், ஊழல், நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 

இதில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறும் நாடு ஊழலற்ற நாடாகவும், பூஜ்ய (0) மதிப்பெண் பெறும் நாடு ஊழல் மிகுந்த நாடாகவும் குறிப்பிடப்படுகிறது. 

இனி வாரத்தில் 4 நாள் வேலை செஞ்சா போதுமாம் - அறிமுகப்படுத்தப்படும் அதிரடி திட்டம்!

இனி வாரத்தில் 4 நாள் வேலை செஞ்சா போதுமாம் - அறிமுகப்படுத்தப்படும் அதிரடி திட்டம்!

இந்தியா..?

அதன்படி இந்த ஆண்டுக்கான ஊழல் மிகுந்த 180 நாடுகளின் தரவரிசை பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், 90 மதிப்பெண்ணுடன் ஊழல் மிகவும் குறைந்த நாடாக டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது.

உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் - இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா..? | 180 Countries In Corruption Perceptions Index 2023

இடண்டாவது இடத்தில் 87 மதிப்பெண்ணுடன் பின்லாந்தும், 85 மதிப்பெண்ணுடன் நியூசிலாந்து 3-ம் இடமும் பிடித்துள்ளன. மேலும், கடந்த ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 93-வது இடத்தைப் பெற்றுள்ளது.

கஜகஸ்தான், லெசோத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 மதிப்பெண்களுடன் இந்தியாவுடன் 93-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான் 133-வது இடமும், இலங்கை 115-வது இடமும், சீனா 76-வது இடமும் பிடித்துள்ளதுன.