இனி வாரத்தில் 4 நாள் வேலை செஞ்சா போதுமாம் - அறிமுகப்படுத்தப்படும் அதிரடி திட்டம்!

Germany World
By Jiyath Jan 31, 2024 05:08 AM GMT
Report

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் ஜெர்மனியில் நடைமுறைக்கு வரவுள்ளது

4 நாட்கள் வேலை 

ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளவுள்ளது. அதன்படி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இனி வாரத்தில் 4 நாள் வேலை செஞ்சா போதுமாம் - அறிமுகப்படுத்தப்படும் அதிரடி திட்டம்! | 4 Day Work Week Culture For 6 Months Germany

இதனால் பணியாளர்களுக்கு மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை தானாம். இதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது. இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என பல தொழிலாளர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.

டிராஃபிக் ஜாமால் மணப்பெண் செய்த காரியம்; அதிர்ந்த நெட்டிசன்கள் - வைரல் Video!

டிராஃபிக் ஜாமால் மணப்பெண் செய்த காரியம்; அதிர்ந்த நெட்டிசன்கள் - வைரல் Video!

தீர்வுக்கு வரும் 

இந்நிலையில் அமலுக்கு வரவிருக்கும் இந்த சோதனை நடைமுறை நல்ல பிரதிபலன்களை அளிக்கும் என தொழிற்சங்கங்களும், ஜெர்மனி அரசும் எதிர்பார்க்கின்றனர்.

இனி வாரத்தில் 4 நாள் வேலை செஞ்சா போதுமாம் - அறிமுகப்படுத்தப்படும் அதிரடி திட்டம்! | 4 Day Work Week Culture For 6 Months Germany

இந்த சோதனையில் ஜெர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இந்த சோதனை அடுத்த 6 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகில் வளர்ந்த நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடித்து வருகின்றன. இந்த நிலையில் ஜெர்மனியும் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடிக்கவுள்ளது.