உலகிலேயே விலையுயர்ந்த தண்ணீர்; 1 லிட்டர் இத்தனை லட்சமா - அப்படி என்ன இருக்கு?
உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படும் தண்ணீர் குறித்து பார்ப்போம்.
தண்ணீர் பாட்டில்
உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் தண்ணீராக, ஜப்பானில் இருக்கும் ஃபிலிகோ ஜூவல்லரி நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில் இருந்து வருகிறது.
ஒரு லிட்டர் வாட்டர் பாட்டலின் விலை 1,390 டாலர். (இந்திய மதிப்பில் ரூ.1,16,000). இவ்வாறு அதிக விலைக்கான காரணம் தூய்மை மட்டுமல்ல, அதன் ஆடம்பரமான பேக்கிங். படிகங்களைப் போல செதுக்கப்பட்டு தண்ணீர் பாட்டில்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பாட்டிலும் தங்க அலங்காரங்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்ட உன்னிப்பாகக் கவனத்துடன் செய்யப்பட்ட கைவினைப்பொருளாக உருவாக்கப்பட்டுள்ளது.
அதிக விலை
இந்த தண்ணீர் கோபி என்ற இடத்தில் இருக்கும் இயற்கை நீரூற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. அழகாக தரத்துடன் தயாரிக்கப்பட்ட பாட்டில்கள் நிரப்பி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதன் ஆடம்பரத்திற்காகவே பலரும் இதை வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.