விலை உயர்ந்த குடியிருப்பை வாங்கிய நீரஜ் பஜாஜ் - இவ்வளவு கோடியா?
விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பை சுமார் ரூ. 252 கோடிக்கு நீரஜ் பஜாஜ் வாங்கியுள்ளார்.
நீரஜ் பஜாஜ்
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் நீரஜ் பஜாஜ். இவர் தெற்கு மும்பையில் வாக்கேஷ்வர் பகுதியில் ஆடம்பர டிரிப்பிளெக்ஸ் பென்ட்ஹவுஸ்-ஐ சுமார் 252.50 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
இதனை லோதா குழுமத்தை சேர்ந்த மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் நிறுவனம் கட்டி வருகிறது. இந்த வீடு 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்களை கொண்டது. இதுவே இந்தியாவில் மிக அதிகமான தொகைக்கு விற்கப்பட்ட வீடு.
ஆடம்பர வீடு
இதற்கு முன்பு இந்தியாவிலேயே விலை உயர்ந்த வீடு என்று சென்ற மாதம் இதே மும்பை நகரில் வொர்லி 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ. 240 கோடியில் தொழிலதிபர் பி. கே. கோயங்கா வாங்கியுள்ளார். ஆனால் 1 மாதத்திற்கு உள்ளாகவே நீரஜ் பஜாஜ் அந்த வீட்டை வாங்கி சாதனையை முறியடித்து விட்டார்.
இந்த வீட்டிற்காக ஒரு சதுர அடி ரூ.1.40 லட்சம் வீதம் செலவிட்டுள்ளார். லோதா மலபார் டவர் மும்பையில் கவர்னர் மளிகைக்கு மிக அருகில் கட்டப்படுகிறது. 31 மாடிகள் கொண்ட 3 பிரிவுகளாக பிரமாண்டமுறையில் எழுப்பி வரும் இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தொடக்க நிலையில் தான் உள்ளன.
2026ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன் இதனைக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.