நிமிடத்தில் கோடீஸ்வரி...11 மாதத்தில் 18 கோடி - வங்கியின் அலட்சியம்!

Australia Malaysia Money
By Sumathi Sep 15, 2022 07:39 AM GMT
Report

வங்கியின் தவறால், நிமிடங்களில் ஒரு பெண் கோடீஸ்வரியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்கானிக்கல் மாணவி

மலேசியாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டின் ஜியாக்சின் லீ என்ற பெண். இவர், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கச் சென்றிருந்தார். அப்போது அவரது வங்கி கணக்கில் திடீரென கோடிக்கணக்கான ரூபாய் வந்துள்ளது.

நிமிடத்தில் கோடீஸ்வரி...11 மாதத்தில் 18 கோடி - வங்கியின் அலட்சியம்! | Girl Becomes Millionaire Bank Mistake Malaysia

Westpac வங்கி கிறிஸ்டின் கணக்கிற்கு வரம்பற்ற ஓவர் டிராஃப்ட் வசதியை தவறுதலாக வழங்கியுள்ளது. அது அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே நிமிடத்தில் மாற்றியுள்ளது. ஆனால் இதுகுறித்து லீ வங்கிக்கு எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் பணத்தை எடுத்து மனம் போன போக்கில் செலவழித்துள்ளார்.

வங்கியின் அலட்சியம்

கணக்கில்லாமல் ஷாப்பிங் செய்து ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளார். விலையுயர்ந்த பிராண்டுகளின் ஆடைகள் மற்றும் நகைகளை வாங்கியுள்ளார். பார்ட்டிகள் மற்றும் பயணங்களுக்கு நிறைய பணம் செலவழித்தோடு, விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பையும் வாங்கியுள்ளார்.

நிமிடத்தில் கோடீஸ்வரி...11 மாதத்தில் 18 கோடி - வங்கியின் அலட்சியம்! | Girl Becomes Millionaire Bank Mistake Malaysia

மேலும், 2.50 லட்சம் ரூபாயை வேறு கணக்கில் மாற்றியுள்ளார். சுமார் 11 மாதங்களுக்கு நிறைய பணம் செலவழித்ததாகவும், அது குறித்து வங்கிக்கு தெரிவிக்கவில்லை என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கோடீஸ்வரியான பெண்

அந்தத் தவறை வங்கி உணர்ந்து கொள்ளும் நேரத்தில், அவர் சுமார் 18 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். தொடர்ந்து லீ கைது செய்யப்பட்டார், ஆனால் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.

விசாரணையில், பெற்றோர், பணத்தை கணக்கிற்கு மாற்றியதாக நினைத்தேன் எனக் கூறினார். அவரது காதலனும் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு பிறகு லீ மலேசியாவுக்கு தப்பிச் சென்றார்.

அவரிடம் இருந்து 10 கோடி தொகையை மீட்டுள்ளனர். மீதமுள்ள தொகையை பெறமுடியாதது குறிப்பிடத்தக்கது.