வெண்பன்றி இறைச்சிதான் டாப் - பலர் விரும்பும் சீக்ரெட்ஸ்!
உலகம் முழுவதும் அதிகளவில் உண்ணப்படும் இறைச்சி குறித்து பார்ப்போம்.
இறைச்சி
உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சி வெண்பன்றி இறைச்சிதான். அறிக்கையின்படி, உலகம் முழுவதும் இறைச்சி உண்பவர்களில் 36 சதவீதம் பேர் வெண்பன்றி இறைச்சியை உட்கொள்கிறார்கள்.
கோழி இறைச்சி இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறது. இது உலகளவில் 33 சதவீத மக்களால் உட்கொள்ளப்படுகிறது. மூன்றாவது இடத்தில் மாட்டிறைச்சி உள்ளது. உலகம் முழுவதும் 24 சதவீதம் பேர் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
வெண்பன்றி
அதிக இறைச்சி உண்பவர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் மீன் உள்ளது. ஆட்டிறைச்சி நுகர்வோரின் எண்ணிக்கை சமீப காலமாக கணிசமாக அதிகரித்துள்ளது.
இது ஐந்தாவது பெரிய இறைச்சியாக இருக்கிறது. இது பெரும்பாலும் அமெரிக்க, கனடிய மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளில் உணவில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.