இமயமலை இல்லை என்றால் எப்படி இந்தியா இருக்கும் தெரியுமா - AI வீடியோ !
இந்தியாவில் இமயமலை இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் AI வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இமயமலை
இந்திய நிலப்பரப்பு மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நில பரப்பாலும் சூழப்பட்டுள்ளது. உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய, மிகவும் உயர்ந்தது இமயமலைத் தொடர். எவரெஸ்ட் உட்பட உலகின் சில மிக உயர்ந்த சிகரங்கள் இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன.
உறைபனியால் மூடப்பட்டு, வெண்பனி மலையாய் காட்சியளிக்கும் இமயமலை இந்தியாவின் வட எல்லை ஆகும். இது சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. அவ்வப்போது சீற்றங்களும் நிகழ்ந்து வருகிறது. இப்படி இந்தியாவில் இமயமலை இல்லை என்றால் எப்படி இருக்கும்.
AI வீடியோ
ஆம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. கற்பனை செய்வதை அப்படியே அச்சுப்பிசகாமல் படைத்து வருகிறது AI தொழில்நுட்பம். அந்த வகையில் என்பதை வெளிப்படுத்தும் AI வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் மும்பை,கேரள பகுதிகள், சென்னை உள்ளிட்ட பகுதிகள் பனி சூழ்ந்து குளிர் பிரதேசமாகக் காட்சியளிக்கிறது. ராஜஸ்தானின் பாலைவனங்கள் பனிமலையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.