ராக்கெட்டை அடுத்து கார் உற்பத்தியில் களம் இறங்கும் ISRO - வெளியான அறிவிப்பு!
உள்நாட்டிலேயே கார் சென்சார்களை உற்பத்தி செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரோ
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISROவின் தலைவர் சோம்நாத் கலந்து கொண்டார் .அப்போது பேசியவர், ராக்கெட், விண்கலன்களுக்கு தேவையான சென்சார்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் கார்களுக்கு தேவையான சென்சார்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதே போல் கார்களுக்கு தேவையான சென்சார்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கார் சென்சார்
இதற்கு கார் உற்பத்தி நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து IT-BT துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில்,“இந்தியாவில் சென்சார்களை உருவாக்கும் யோசனை தொழில் துறை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
அதுமட்டுமில்லாமல் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்துள்ள மாநில பொருளாதாரத்திற்கு உதவும். இதனால் இண்டிஜினிசேஷன் வாகனங்களின் விலையைக் குறைக்க உதவும். இது சிறு நிறுவனங்களுக்கும் உதவும் என்று தெரிவித்துள்ளார்.