இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளீர்களா? அப்போ விசா இல்லாமல் இங்கெல்லாம் போகலாம்!
விசா எடுக்காமல் செல்லக் கூடிய 10 நாடுகள் எதெல்லாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
விசா வேண்டாம்
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தாய்லாந்து, பூடான், மொரீஷியஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையின் போது இந்த சலுகைகள் பயன் உள்ளதாக இருக்கும்.
தாய்லாந்து - இங்கு விசா இல்லாமல் 60 நாட்கள் தங்கலாம்.
பூட்டான் - விசா இல்லாமல் 14 நாட்கள் தங்கலாம்.
நேபாளம் - இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை.
மொரீஷியஸ் - இந்திய பயணிகளுக்கு 90 நாள் விசா இல்லாத நுழைவை வழங்குகிறது.
மலேசியா - விசா இன்றி 30 நாட்கள் வரை தங்கலாம்.
கென்யா - விசா இல்லாமல் 90 நாட்கள் தங்குவதை அனுமதிக்கிறது.
ஈரான் - 15 நாட்கள் வரை தங்குவதற்கு இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.
அங்கோலா - அதிகபட்சம் 30 நாட்கள் விசா இல்லாமல் தங்கலாம்.
பார்படாஸ் - இந்த கரீபியன் தீவில் விசா இல்லாமல் அதிகபட்சம் 90 நாட்கள் தங்கலாம்.
டொமினிகா - இந்தியர்கள் இங்கு விசா இல்லாமல் 180 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கலாம்.