மத்திய அரசின் வளர்ச்சிக்கு.. திராவிட மாடலின் வளர்ச்சி மிகவும் முக்கியம் -டி.ஆர்.பி.ராஜா 'நச்'
தமிழகத்துக்கு வரவுள்ள புதிய முதலீடுகளால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாட்டில் தொழில்துறையின் கீழ் குறுந்தொழில் முனைவோரை வலுப்படுத்துவது குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ‘புதிய பயணம் - வளர்சியை நோக்கி’ எனும் திட்டத்தினை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் ,'' தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களை தொழில் முதலீட்டாளர்களாகவும், குறுந்தொழில் தொழில் முனைவோர்களாகவும் மாற்றும் நோக்கில் 'புதிய பயணம் - வளர்ச்சியை நோக்கி' எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய பயணம்
இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 8 மாவட்டங்களில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயிற்சி பெற்று குறுந்தொழில் முனைவோர்களாக பயன்பெறுவர் என்று கூறினார். மேலும் ரூ.45 ஆயிரம் கோடிக்கு புதிய முதலீடுகள் தமிழகத்துக்கு வரப்போகின்றன.
அதன்படி இந்த முதலீடுகளின் மூலம்25 ஆயிரம் உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
மத்திய அரசின் வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்துக்கு திராவிட மாடலின் வளர்ச்சி மிகவும் முக்கியம் என்று கூறினார்.