சில்லறை கட்சி.. அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி!

Coimbatore DMK BJP K. Annamalai Lok Sabha Election 2024
By Jiyath Mar 26, 2024 06:58 PM GMT
Report

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி கொடுத்துள்ளார். 

அண்ணாமலை 

கோவையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது கோவை மக்களவை தொகுதி வேட்பாளாரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

சில்லறை கட்சி.. அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி! | Annamalai Vs Trb Raaja Lok Sabha Election Campaign

அப்போது பேசிய அவர் "தஞ்சாவூரை சேர்ந்த டிஆர்பி ராஜாவிற்கு என்று தனித்திறமை ஏதும் இல்லை. அவரது தந்தை பணம் சேர்த்து வைத்தார். இவர் அதைக்கொண்டு அரசியலுக்கு வந்தவர். டிஆர்பி ராஜா, தந்தையின் பணத்தைக்கொண்டு கோவை மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைத்து இருக்கிறார்.

கோவை மக்களை சில்லரை என்று சொல்லவும் ஆரம்பித்துவிட்டார். அந்த அளவிற்கு அரசியல் நாகரிகம் ஆகிவிட்டது. டிஆர்பி ராஜா அல்லது அவர் அப்பா டிஆர் பாலு என யார் வேண்டுமென்றாலும் வரட்டும். மக்கள் இந்த ஈசல்களை துரத்தி அடித்து விடுவார்கள்" என்றார்.

திமுக - மதிமுக இடையே மனக்கசப்பா..? துரை வைகோ விளக்கம்!

திமுக - மதிமுக இடையே மனக்கசப்பா..? துரை வைகோ விளக்கம்!

டி.ஆர்.பி. ராஜா

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடம் பாஜக மற்றும் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "பிரதான எதிர்க்கட்சியான அதிமுக என்ன சொன்னதென கூறுங்கள்.. பதில் சொல்கிறேன்.

சில்லறை கட்சி.. அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி! | Annamalai Vs Trb Raaja Lok Sabha Election Campaign

சில்லறை கட்சிகள் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. தேவையில்லாத விஷயங்களின்மீது கவனம் செலுத்துவது, கவனத்தை சிதறச் செய்யும். அதனால் தேர்தலில் வெற்றி பெற களத்தில் எதிரியை கண்டறிந்து பணியாற்ற உள்ளோம். நிச்சயம் தேர்தலில் வெற்றிபெறுவோம். என்றார்.

மேலும், திமுகவினர் மரங்கள், செடிகளை அழித்து ஆறுகளில் நீரை அள்ளியதால் கோவையில் 2 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ளது’ என்ற அண்ணாமலையின் கூற்றுக்கு பதிலளித்த டிஆர்பி ராஜா, “நான் இன்னும் அடுப்பையே பற்றவைக்கவில்லை” என்று பதிலளித்தார்.