திமுக - மதிமுக இடையே மனக்கசப்பா..? துரை வைகோ விளக்கம்!

Marumalarchi Dravida Munnetra Kazhagam Tamil nadu DMK trichy Lok Sabha Election 2024
By Jiyath Mar 26, 2024 06:30 AM GMT
Report

திமுக - மதிமுக இடையே எந்த மனக்கசப்பும் இல்லை என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.   

துரை வைகோ

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

திமுக - மதிமுக இடையே மனக்கசப்பா..? துரை வைகோ விளக்கம்! | No Resentment Between Dmk And Mdmk Durai Vaiko

இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் மதிமுகாவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் போட்டியிடும் துரை வைகோ நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "என்னால் முடிந்தவரை திருச்சி தொகுதியில் மக்கள் பணியாற்றுவேன்.

மதிமுக எம்.பி விபரீத முடிவு; எம்எல்ஏ.வாக நிற்க வைக்க எண்ணினேன் - வைகோ உருக்கம்!

மதிமுக எம்.பி விபரீத முடிவு; எம்எல்ஏ.வாக நிற்க வைக்க எண்ணினேன் - வைகோ உருக்கம்!

விளக்கம் 

நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நடந்த சம்பவம் திமுக மற்றும் மதிமுக தொண்டர்கள் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியதாக சொல்கிறீர்கள். அப்படி எந்த மனக்கசப்பும் ஏற்படவில்லை.

திமுக - மதிமுக இடையே மனக்கசப்பா..? துரை வைகோ விளக்கம்! | No Resentment Between Dmk And Mdmk Durai Vaiko

அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நான் அப்படி பேசியது உணர்வுகள், உணர்ச்சிகளின் வெளிப்பாடு. மனிதர்களிடம் இது இயல்பானது. இங்கு என்னுடன் வந்திருக்கும் திமுக நிர்வாகிகளை பார்த்தாலே உங்களுக்கு அது தெரியும். எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் நான் பேசவில்லை.

மனு தாக்கல் செய்ய வருவதற்கு முன்னர் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அப்போது வாசல் வரை வந்து என்னை வழி அனுப்பினார். என்னை அவர் தனது மகனாக பாவித்து வெற்றி பெற்று நல்லபடியாக வரவேண்டும் என வாழ்த்தினார்" என்று தெரிவித்துள்ளார்.