பாஜக எந்த குட்டிக்கரணம் அடித்தாலும்..தமிழ்நாட்டில் நடக்காது - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி

Tamil nadu DMK Election Lok Sabha Election 2024
By Karthick Apr 19, 2024 11:00 AM GMT
Report

தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் இருப்பதாக தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது வாக்கை செலுத்திய பிறகு தெரிவித்தார்.

வாக்குப்பதிவு

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மும்முரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை மதியம் 1 மணி நிலவரம் படி, 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 6 மணி வரை வாக்கெடுப்பு நடைபெறும் என்ற நிலையில், இந்த கணக்கு இன்னும் அதிகரிக்கும்.

bjp-will-not-workout-in-tamil-nadu-says-trb-raaja

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

2026 தேர்தலில்...அதிமுக எங்கள் பக்கம் வரும் - ஓபிஎஸ் நம்பிக்கை

2026 தேர்தலில்...அதிமுக எங்கள் பக்கம் வரும் - ஓபிஎஸ் நம்பிக்கை


அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் நல்லாட்சியில் ஒட்டுமொத்த தமிழகமே செழித்துக் கொண்டிருக்கும் வேலையில் ஒட்டுமொத்த இந்தியர்களும் தமிழ்நாட்டைப் போன்ற ஒரு வளர்ச்சி வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

குட்டிக்கரணம் 

திமுகவிற்கும் - அதிமுகவிற்கும் தான் கோயம்புத்தூரில் பிரதான போட்டி, பாஜக நாங்களும் இருக்கிறோம் என்று குறுக்கே ஓடிக்கொண்டு இருக்கின்றது. இந்தியாவை நூதன முறையில் கொள்ளையடித்தவர்கள் பாஜகவினர்.

bjp-will-not-workout-in-tamil-nadu-says-trb-raaja

வாக்கு வங்கிக்காக குறுக்கு வழியில் குட்டிக்கரணம் அடிக்கிறார்கள். எந்த குட்டிக்கரணமும் தமிழகத்தில் வேலைக்காகாது. அனைவருக்குமே தற்போது தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் இருக்கிறது.

bjp-will-not-workout-in-tamil-nadu-says-trb-raaja

தேர்தல் ஆணையர்களை யார் நியமித்தது என்பது அனைவருக்குமே தெரியும். பாஜக குறுக்கு வழியில் வெற்றி பெறமுடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்