2026 தேர்தலில்...அதிமுக எங்கள் பக்கம் வரும் - ஓபிஎஸ் நம்பிக்கை
வாக்களித்து முடித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர்கள் பற்றி அண்ணாமலை சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என தெரிவித்தார்.
ஓபிஎஸ் வாக்குப்பதிவு
முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், சுயேட்சையாக நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுர தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
சுயேட்சையாக களமிறங்கிய அவருக்கு தேர்தல் ஆணையம் பலாப்பழ சின்னம் ஒதுக்கியது. தேர்தல் பிரச்சாரத்தில் தீவிர காட்டிய அவர், அதிமுக மற்றும் திமுகவை விமர்சித்து பிரச்சாரம் செய்தார். அவருக்கு ஆதரவாக களத்தில் பாஜகவினர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
கடைசி நாள் பிரச்சரத்தின் போது, பாஜக மாவட்ட செயலாளருக்கும், ஓபிஎஸ் தரப்பிற்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தகவல் வெளிவந்தது. இந்த சூழலில், இன்று வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், ஓபிஎஸ் தனது சொந்த ஊரான தேனி பெரிய குளத்தில் தனது வாக்கினை செலுத்தினர்.
அதிமுக எங்கள்
அதனை தொடர்ந்து அவர், செய்தியாளர்களை சந்தித்த போது பேசியது வருமாறு, ராமநாதபுரத்தில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக வெற்றி பெறுவேன்.
இப்பொது ராமநாதபுரம் செல்கிறேன். மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்ற அலை இந்தியா முழுவதும் இருக்கிறது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு எடுத்த முடிவினால் தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன்.
அண்ணாமலை அதிமுக குறித்து சொன்னது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மையே என்றும் அதிமுக உறுதியாக எங்கள் பக்கம்தான் வந்தடையும். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.