திணறிய வாக்குச்சாவடி - சைலண்டாக வந்து ஜனநாயக கடமையை ஆற்றிய விஜய்

Vijay Thamizhaga Vetri Kazhagam Lok Sabha Election 2024
By Karthick Apr 19, 2024 07:03 AM GMT
Report

 நடிகர் விஜய் தனது வாக்கை செலுத்தினார்.

தேர்தல் வாக்கெடுப்பு

நாட்டின் ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தல் இன்று துவங்கியுள்ளது. நாட்டில் அடுத்த 5 ஆண்டிற்கு ஆளும் அரசை தேர்வு செய்யும் இந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை 40 தொகுதிகளை சேர்ந்து நாட்டில் மொத்தமாக 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.

actor-vijay-came-to-vote-lok-sabha-election-2024

வாக்கெடுப்பு துவங்கியது முதலே அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும், திரை துறை பிரபலங்களும் வரிசையில் வந்து வாக்களித்து வருகிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் வேட்பாளர்கள் டி.ஆர்.பாலு, தமிழிசை என பலரும் தங்களது வாக்கை செலுத்தியுள்ளனர்.

வாக்களித்தார் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான நடிகர் விஜய் வாக்களிக்க வருவது பெரும் சிக்கலான ஒன்றாகவும், சவாலானதாக மாறியதாக தகவல் வெளியானது.

நீண்ட நேரம் காத்திருந்தேன் - முந்திக்கொண்டு சென்ற அஜித் - 82 வயது முதியவர் ஆதங்கம்

நீண்ட நேரம் காத்திருந்தேன் - முந்திக்கொண்டு சென்ற அஜித் - 82 வயது முதியவர் ஆதங்கம்


ஆனால், அதனை முறியடிக்கும் வகையில் நடிகர் விஜய் இன்று சென்னை அமைந்துள்ள பள்ளியில் அவர் தனது வாக்கை செலுத்தினார்.   பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜய்யின் வாக்கெடுப்பு தற்போது நடந்து முடிந்துள்ளது.

actor vijay casts his vote

வெள்ளை நிற சட்டையில்-  ரசிகர்களின் படைசூழ, மீடியா - பத்திரிகையாளர்களின் கூட்டத்தில் பெரும் கூட்டத்திற்கு மத்தியில் வந்து வாக்களித்து சென்றார் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாக்களித்தார்.