நீண்ட நேரம் காத்திருந்தேன் - முந்திக்கொண்டு சென்ற அஜித் - 82 வயது முதியவர் ஆதங்கம்

Ajith Kumar Tamil nadu Chennai Lok Sabha Election 2024
By Karthick Apr 19, 2024 03:39 AM GMT
Report

வாக்காளர்கள் தவறாமல் தங்களது வாக்குரிமையை செலுத்திட வேண்டும்.

ஜனநாயக திருவிழா

நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தல் இன்று முதற்கட்டமாக துவங்கி நடைபெற்று வருகின்றது. நாட்டிலுள்ள 543 இடங்களில் இன்று 102 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

நீண்ட நேரம் காத்திருந்தேன் - முந்திக்கொண்டு சென்ற அஜித் - 82 வயது முதியவர் ஆதங்கம் | Ajith Voting In Thiruvanmaiyur Old Man Sad

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து வருகின்றது. காலை முதலே மக்கள் பெரும்திரளான கூட்டமாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து வருகிறார்கள்.

முந்திய அஜித்

காலை முதலே பிரபலங்கள் பலரும் தங்களது வாக்கை செலுத்தி வருகிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், இளையராஜா ஆகியோர் தங்களது வாக்கை செலுத்திவிட்டு சென்றுள்ளனர்.

நீண்ட நேரம் காத்திருந்தேன் - முந்திக்கொண்டு சென்ற அஜித் - 82 வயது முதியவர் ஆதங்கம் | Ajith Voting In Thiruvanmaiyur Old Man Sad

இந்த நேரங்களில் வாக்கு செலுத்த வரும் போது, நட்சத்திரங்களை காண, பெரிய கூட்டம் கூடும். மீடியா வெளிச்சம் வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்து வரும் நடிகர் அஜித், இன்று காலை முதல் ஆளாக சென்னை திருவான்மியூரில் தனது வாக்கை செலுத்தினார்.

தேர்தல் திருவிழா 2024 - ஜனநாயக கடமையை ஆற்ற குவிந்த பிரபலங்கள்

தேர்தல் திருவிழா 2024 - ஜனநாயக கடமையை ஆற்ற குவிந்த பிரபலங்கள்

அந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகின. அதே நேரத்தில், முதல் ஆளாக அஜித் வாக்கு செலுத்தியது தொடர்பாக வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளத்தில் வைரலாகின்றது.

நீண்ட நேரம் காத்திருந்தேன் - முந்திக்கொண்டு சென்ற அஜித் - 82 வயது முதியவர் ஆதங்கம் | Ajith Voting In Thiruvanmaiyur Old Man Sad

அதில், அஜித் வருவதற்கு முன்பே தான் வந்து வெகு நேரமாக காத்திருந்த நிலையிலும் தன்னை வாக்களிக்க உள்ளே அனுப்பவில்லை என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார் இந்த 82 வயது முதியவர்.