தேர்தல் திருவிழா 2024 - ஜனநாயக கடமையை ஆற்ற குவிந்த பிரபலங்கள்
வாக்காளர்கள் தங்களது வாக்கை தவறாமல் செலுத்திட வேண்டும்.
தேர்தல் வாக்கெடுப்பு
நாட்டின் ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தல் இன்று துவங்கியுள்ளது. நாட்டில் அடுத்த 5 ஆண்டிற்கு ஆளும் அரசை தேர்வு செய்யும் இந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை 40 தொகுதிகளை சேர்ந்து நாட்டில் மொத்தமாக 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.
இன்று, சிக்கிம் மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பும் நடைபெற்று வருகின்றது.
திரண்ட பிரபலங்கள்
இன்று காலை வாக்கெடுப்பு துவங்கிவுடனே முதல் ஆளாக நடிகர் அஜித்குமார் தனது வாக்கை செலுத்தினார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தியுள்ளார். அதே போல தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் சிலுவம்பாளையத்திலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கரூரிலும் தங்களது வாக்கை செலுத்தியுள்ளனர்.
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார், பாரிவேந்தர், சவுமியா அன்புமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் விஜயபிரபாகரன், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கீதா ஜீவன் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் தங்களது வாக்கை செலுத்தியுள்ளனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, சிவகார்த்திகேயன் ஆகியோரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சென்றுள்ளனர்.
இன்று காலை 7 முதல் மாலை 6 மணி வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், மக்கள் தவறாது தங்களது வாக்கை செலுத்தவும்.
தமிழகத்தில் நடைபெறும் வாக்கெடுப்பு நடவடிக்கைகளை சிறப்பு நேர்காணலாக ஐபிசி தமிழ் வழங்குகிறது. அந்த லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.