துவங்கிய வாக்கு பதிவு - முதல் ஆளாக வந்து வாக்களித்த அஜித் குமார்

Ajith Kumar Tamil nadu Lok Sabha Election 2024
By Karthick Apr 19, 2024 01:46 AM GMT
Report

வாக்காளர்களே இன்று உங்கள் வாக்கை செலுத்த தவறாதீர்கள்.

மக்களவை தேர்தல்

நாட்டின் அரசை தேர்வு செய்யும் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியுள்ளது. தமிழகம் - புதுவை 40 தொகுதிகளை சேர்த்து நாட்டில் மொத்தமாக 102 இடங்களில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

lok-sabha-election-2024-start-ajith-kumar

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் உட்பட பல சிறு சிறு கட்சிகளும், சுயேட்சைகளும் போட்டியிடுகிறார்கள்.

lok-sabha-election-2024-start-ajith-kumar

வாக்களிக்கவருபவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் வாக்கு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பதட்டமான வாக்குசாவடிகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவமும் களத்தில் இருக்கின்றது. 

வாக்களிக்க திரளபோகும் நட்சத்திரங்கள் - எங்கு ஓட்டு போடுகிறார்கள்?

வாக்களிக்க திரளபோகும் நட்சத்திரங்கள் - எங்கு ஓட்டு போடுகிறார்கள்?

வாக்கெடுப்பு துவங்கிய சில நிமிடங்களிலேயே நடிகர் அஜித் குமார், வரிசையில் வந்து சென்னை திருவான்மியூர் தனியார் பள்ளியில் தனது வாக்கை செலுத்தி விட்டு சென்றுள்ளார்.காலை வாக்கெடுப்பு துவங்கிய முதலே மக்கள் கூட்டம் கூட்டமாகி தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறும் வாக்கெடுப்பு நடவடிக்கைகளை சிறப்பு நேர்காணலாக ஐபிசி தமிழ் வழங்குகிறது. அந்த லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.