வாக்களிக்க திரளபோகும் நட்சத்திரங்கள் - எங்கு ஓட்டு போடுகிறார்கள்?

Tamil nadu Lok Sabha Election 2024
By Karthick Apr 18, 2024 09:59 AM GMT
Report

தமிழகத்தில் நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தல்

நாடே எதிர்பார்த்திருக்கும் நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் நாளை நடக்கவுள்ளது. பலரும் வாக்களிப்பதை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

celebrities-voting-place-chennai-lok-sabha

வாக்கெடுப்பின் போது, நட்சத்திரங்களையும் நாம் காண முடியும். அப்படி எந்தெந்த நட்சத்திரங்கள் எங்கெங்கே வாக்களிப்பார்கள் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

நட்சத்திரங்கள் எங்கே..?

நடிகர் ரஜினிகாந்த் அவரது குடும்பத்துடன் சென்னை தேனாம்பேட்டையில் வாக்களிக்கவுள்ளார். பிரபல நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை பனையூரிலும், நடிகர் கமல் அவரது குடும்பத்தினருடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் வாக்களிக்கவுள்ளார்கள்.

celebrities-voting-place-chennai-lok-sabha

நடிகர் அஜித் குமார் நாளை அவரது குடும்பத்தாருடன் சென்னை நீலாங்கரையில் வாக்களிக்கிறார்கள். அதே போல, சூர்யா அவரது குடும்பத்துடன் சென்னை தியாகராய நகர் விஜயலக்ஷ்மி நகரில் வாக்களிக்க இருக்கிறார்கள்.

ஒருமுறை பொத்தன் அழுத்தினால் - பாஜகவிற்கு 2 ஓட்டு!! வெடித்த சர்ச்சை - உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

ஒருமுறை பொத்தன் அழுத்தினால் - பாஜகவிற்கு 2 ஓட்டு!! வெடித்த சர்ச்சை - உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

விஜய் சேதுபதி கோடம்பாக்கம் பகுதி பள்ளியில் வாக்களிக்கவுள்ள நிலையில், விஜய் ஆண்டனி, இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ், விஜயகாந்த் குடும்பத்தினர் ஆகியோர் சாலிகிராமத்தில் அமைந்திருக்கும் பள்ளியில் வாக்களிக்கவுள்ளார்கள்.

celebrities-voting-place-chennai-lok-sabha

நடிகர் வாகை சந்திரசேகர் கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளியிலும், நடிகர் கருணாகரன் திருவான்மியூரில் உள்ள அட்வென்ட் கிறிஸ்டியன் பள்ளியிலும், நடிகை வரலட்சுமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் கோட்டூர்புரம் அரசு பள்ளியிலும் வாக்களிக்க உள்ளனர். இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளியிலும், கவிஞர் வைரமுத்து சென்னை சூளைமேட்டில் வாக்களிக்கிறார்.