ஒருமுறை பொத்தன் அழுத்தினால் - பாஜகவிற்கு 2 ஓட்டு!! வெடித்த சர்ச்சை - உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
கேரளா மாநிலத்தில் மாதிரி வாக்கெடுப்பு பயிற்சியின் போது ஒரு முறை போத்தனை அழுத்தினால், பாஜகவிற்கு 2 வாக்குகளை பதிவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல்
நாட்டின் மக்களவை தேர்தல் நெருங்கயிருக்கும் நிலையில், மையங்களில் வாக்கெடுப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தல் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தலில் EVM மெஷினிற்கு பதிலாக வாக்கு சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கைகளும் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
2 வாக்கு
இந்நிலையில் தான், கேரளாவின் காசர்கோடு பகுதியில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தான் இந்த குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் எழுப்பியுள்ளன. இதனையடுத்து கேரளாவின் UDF மற்றும் LDF கூட்டணி தரப்புகளில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில்,இன்று உச்சநீதிமன்றத்தில் வாக்கு மெஷின் EVM-VVPAT ஆகியவற்றை 100% சரிபார்ப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று முன்னர் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைபோது, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இந்த பத்திரிகை செய்தியையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதி கண்ணா இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியிருக்கின்றார்.