வாக்காளர் அட்டை இல்லையா? கவலை இல்லை - இந்த document இருந்தாலே ஓட்டு போடலாம்

Tamil nadu Lok Sabha Election 2024
By Karthick Apr 18, 2024 04:42 AM GMT
Report

நாளுக்கு முதல்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தல்

நாட்டின் அடுத்த அரசை தேர்வு செய்யும் நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் நாளை முதல் துவங்கி நடைபெறுகிறது. தமிழகத்தில் இருக்கும் 39 இடங்களுக்கும் ஒரே கட்டமாகவும், மற்ற பிற மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

how-can-vote-without-voter-id-and-booth-slip

நாடே பெரிதும் எதிர்பார்த்திற்கும் தேர்தலில், எக்கட்சி வெற்றி வாகை சூடி மீண்டும் ஆட்சியை பிடிக்கபோகிறது என்ற ,மாபெரும் ஆவல் மக்களிடம் உருவாகியுள்ளது. பூத் ஸ்லிப் வாக்குசாவடிகளில் வாக்காளர்கள் அனைவரும் சென்று வாக்கு செலுத்துவது அவசியமானது என்பதை தாண்டி கட்டாயமானதாகும். தமிழகம் முழுவதும் 68 ஆயிரம் வாக்குசாவடிகள் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

how-can-vote-without-voter-id-and-booth-slip

வாக்களிக்கப்பதை பாதுகாப்பானதாக மாற்ற, பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளதை அடுத்து, அநேக மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பூத் ஸ்லிப் வாங்காதவர்கள் எவ்வாறு, வாக்களிப்பது என்றே சந்தேகம் பலரிடம் எழுந்துள்ளது. இது குறித்து தகவல் அளித்துள்ள சத்யபிரதா சாகு, பூத் ஸ்லிப் இல்லையென்றாலும் வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

how-can-vote-without-voter-id-and-booth-slip

இருப்பினும் வாக்காளர் அட்டை இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாக்காளர்கள் இணையத்தில் தங்களது பெயர் இருப்பதை உறுதிசெய்திட வேண்டும் என்பது கட்டாயமானது.

பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள்

  • ஆதார் அட்டை 
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைக்கான அடையாள அட்டை
  • ஓய்வூதிய ஆவணம்
  • வங்கி புத்தகம் 

மக்களவைத் தேர்தல்(2024): 11- 20 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஐபிசியின் மெகா கருத்து கணிப்பு!

மக்களவைத் தேர்தல்(2024): 11- 20 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஐபிசியின் மெகா கருத்து கணிப்பு!


  • தபால் அலுவலகம் அலுவலகத்தின் கணக்குப் புத்தகங்கள்
  • தொழிலாளர் அமைச்சகத்தின் வழங்கிய காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
  • ஓட்டுநர் உரிமம்
  • பான் அட்டை
  • தேசிய மக்கள்தொகையின் ஸ்மார்ட் அட்டை