மக்களவைத் தேர்தல்(2024): 11- 20 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஐபிசியின் மெகா கருத்து கணிப்பு!
தமிழகத்தில் வாக்கெடுப்பு நாள் ஏப்ரல் 19.வாக்களிக்க மறவாதீர்.
ஐபிசி தமிழ் கருத்துக்கணிப்பு
வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டின் களநிலவரத்தை குறித்து ஐபிசி தமிழ் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள 39 தொகுதிகளின் களநிலவரத்தை ஆராய்ந்து, ஐபிசி தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் இதோ.
11- திருவண்ணாமலை
திமுக - அண்ணாதுரை, அதிமுக - கலியபெருமாள், பாஜக - அஸ்வத்தாமன், நாம் தமிழர் - ரமேஷ்பாபு.
திமுக வேட்பாளர் அண்ணாதுரை வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
12 -ஆரணி
திமுக - தரணி வேந்தன், அதிமுக- ஜி.வி. கஜேந்திரன், பாமக (பாஜக கூட்டணி) - கணேஷ் குமார், நாம் தமிழர் - பாக்கிய லட்சுமி.
திமுக வேட்பாளரான தரணி வேந்தன் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
13- விழுப்புரம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி(திமுக கூட்டணி) - ரவிக்குமார், அதிமுக - பாக்கியராஜ், பாமக (பாஜக கூட்டணி) - முரளி ஷங்கர், நாம் தமிழர் - களஞ்சியம்
திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரான ரவிக்குமார் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
14 - கள்ளக்குறிச்சி
திமுக - மலையரசன், அதிமுக - குமரகுரு, பாமக - இரா. தேவதாஸ், நாம் தமிழர் - ஜெகதீசன்
திமுக வேட்பாளரான மலையரசன் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
15 - சேலம்
திமுக - சார்பில் செல்வகணபதி, அதிமுக - விக்னேஷ், பாமக (பாஜக கூட்டணி) - அண்ணாதுரை, நாம் தமிழர் - மனோஜ்குமார்.
அதிமுகவின் விக்னேஷ் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
16 - நாமக்கல்
கொங்கு மக்கள் தேசிய கட்சி(திமுக கூட்டணி) - மாதேஸ்வரன், அதிமுக - தமிழ்மணி, பாஜக - ராமலிங்கம், நாம் தமிழர் - கனிமொழி.
இங்கு இழுபறி நீடிக்கும் என்றும் ஆனால், அதிமுகவின் வேட்பாளர் தமிழ்மணி வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
17 - ஈரோடு
திமுக - பிரகாஷ், அதிமுக - ஆற்றல் அசோக் குமார், தமிழ் மாநில காங்கிரஸ்(பாஜக கூட்டணி) - விஜயகுமார், நாம் தமிழர் - கார்மேகம்.
திமுகவின் பிரகாஷ் மற்றும் அதிமுகவின் அசோக் குமார் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
18 - திருப்பூர்
சிபிஐ(திமுக கூட்டணி) - சுப்புராயன், அதிமுக - அருணாச்சலம், பாஜக - முருகானந்தம், நாம் தமிழர் - சீதாலட்சுமி
இதில், சிபிஐ சார்பில் போட்டியிடும் சுப்புராயன் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
19 - நீலகிரி (தனி)
திமுக - ஆ.ராசா, அதிமுக - லோகேஷ் தமிழ்ச் செல்வன், பாஜக - எல்.முருகன், நாம் தமிழர் - ஜெயக்குமார்.
திமுக வேட்பாளரான ஆ.ராசா மீண்டும் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
20- கோயம்பத்தூர்
திமுக - கணபதி பி.ராஜ்குமார், அதிமுக - சிங்கை ஜி.ராமச்சந்திரன், பாஜக - அண்ணாமலை, நாம் தமிழர் - கலாமணி
இதில், கடும் போட்டியுடன் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், பாஜக வேட்பாளர் அண்ணாமலையும் வெற்றிபெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.