இதுதான் moon halo..நிலவைச் சுற்றி தெரிந்த ஒளிவட்டம் - இயற்கையின் அரிய நிகழ்வு!
நிலவைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றினால் அது மோசமான வானிலையின் அறிகுறி என்று சிலர் கூறி வருகின்றனர்.
ஒளிவட்டம்
வானில் அறிய நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும். இதில் சிலவற்றை மனிதர்களால் பார்க்க இயலும். சில நிகழ்வுகளைப் பார்க்க இயலாது. நிலவின் ஒளி என்பது சூரியனின் ஒளிதான். சூரிய ஒளி நிலவில் பட்டு எதிரொலிக்கப்படுகிறது. எனவே நிலவொளியும் VIBGYOR ஊ க நீ ப ம ஆ சி என்ற ஏழு வண்ணங்களின் கலவைதான்.
மழைக்காலங்களில் சூரியன் கீழ் வானத்தில் உள்ளபோது மழைத்துளி வழியாக ஊடுருவும் சமயம் ஒளிவிலகல் காரணமாக ஏழு வண்ணங்களும் பிரிக்கப் பட்டு வானவில் தோன்றுகிறது. அதேபோல் காற்றில் நீர் அடர்த்தி அதிகமாகவும், வானம் தெளிவாகவும் இருக்கும் சமயத்தில் நிலவொளி ஒளிவிலகல் மூலம் வானவில்லைத் தோற்றுவிக்கும்.
சாதாரணமாக வானவில் சூரியன் கீழ் வானத்தில் உள்ளபோது வானவில் தோன்றுவதால் முழு வட்டம் உருவாகாது. ஆனால் நிலவு மேல் வானில் இருக்கும்போது வானவில் தோன்றுவதால் முழு வட்டம் உருவாகும். அதேசமயம் காற்றில் நீரின் அடர்த்தி, அது பரவி இருக்கும் பரப்பு அளவு ஆகியவற்றின் அடிப்படையில் நிலவைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்.
கட்டுக்கதை
அந்த வகையில் திருவாரூரில் இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது. அதாவது நேற்று இரவு திருவாரூரில் நிலவைச் சுற்றி ஒளிவட்டம் தெரிந்தது.இந்த ஒளிவட்டம் நிலவைச் சுற்றி பிரகாசமாக இருந்தது. இந்த அறிய நிகழ்வினை கண்ட திருவாரூர் மக்கள் தங்களது செல்போனில் போட்டோ எடுத்து சமுக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த போட்டோகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நிலவைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றினால் அது மோசமான வானிலையின் அறிகுறி என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் அது முழுக்க முழுக்க கட்டுக்கதை என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.