ஒரே நாளில் 11 லட்சம் முறை மின்னல் தாக்குதல்.. வானில் நடந்த நிகழ்வு - ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி!
ஒரே நாளில் 11 லட்சம் முறை மின்னல் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மின்னல்
பொதுவாக மழை காலங்களில் மேகங்களுக்கு இடையே ஏற்படும் உராய்வு காரணமாக மின்னல் மற்றும் இடி உண்டாவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த மின்னலை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது.
அப்படிப் பார்த்தால் பார்வை இழக்க நேரிடும்.குறிப்பாக மழைக் காலங்களில் தாக்கும் மின்னலால் உயிரிழப்புகளும் கூட ஏற்படும்.இந்த நிலையில் ஒரே நாளில் ஆஸ்திரேலியாவில் 11 லட்சம் முறை மின்னல் தாக்கியுள்ளது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் இடியுடன் கூடிய மழை பெய்தது .அப்போது தான் இந்தளவுக்கு மின்னல் சரமாரியாகத் தாக்கியுள்ளன.குறிப்பாக உளுருவில் என்ற பகுதியில்7.19 லட்சம் முறையும்,தென்கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் 3.28 லட்சம் முறையும் தாக்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியா
மேலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் சுமார் 95,000 மின்னல் தாக்குதல்கள் சுமார் 800 கிலோமீட்டர் சுற்றளவில் நடந்துள்ளது.இந்த நிகழ்வுகள் குறித்து ஆராய்ச்சியாளர் கூறுகையில், பொதுவாக மத்திய ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா என்பது வறண்ட பகுதிகள்.
இந்த பகுதியில் புயல் மற்றும் மின்னல் குறைவாகவே இருக்கும்.மத்திய ஆஸ்திரேலியா பகுதியில் ஏற்பட்ட ஒரு புயலும், கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட புயலும் ஒரே இடத்தில் சந்தித்ததே இதற்குக் காரணமாகும் எனத் தெரிவித்துள்ளனர்.