பூமி மீது மோத வரும் விண்கல்? விழுந்தால் அவ்வளவுதான்..விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!
விண்கல் ஒன்று பூமி மீது மோத வருவதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விண்கல்
இந்த பிரபஞ்சம் முழுவதும் பல விதமான விசித்திரங்களும் அதிசயங்களும் நிறைந்தது என்று கூறலாம். இந்த பிரபஞ்சம் நாள்தோறும் விஞ்ஞானிகளை திகைக்க வைத்து ஆச்சர்யத்திலும் அதிர்சியிலும் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது.
முன்னதாக பூமி அதன் இறுதி காலத்தை எட்டியுள்ளதாகவும் மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்படக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருந்தனர்.
தற்போது அதற்கு ஏற்ப மற்றொரு விஞ்ஞானிகள் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளளனர். அதாவது, சூரியனை சுற்றி வரும் விண்கல் ஒன்று நாளை பூமி மீது மோதலாம் என நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சியளித்துள்ளார்கள்.
அதிர்ச்சி தகவல்
ஒரு விண்கல் என்பது ஒரு சிறிய கிரகம் என்றே சொல்லலாம். பெரிய விண்கற்கள் உடைந்து சிதறும் போதோ அல்லது கோள்கள் உருவாகும் போதோ மிச்சமிருக்கும் பொருட்கள் விண்கல்லாக உருவாகிறது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
தன்னை தானே சுற்றிக்கொள்ளாத, வெவ்வேறு பாதைகளில் சூரியனை சுற்றி பயணிக்கும் தன்மை கொண்டவையாக விண்கல் இருக்கின்றன. இந்த விண்கல் கிரகங்கள் மீது அவ்வப்போது விழுகிறது. ற்போது பூமிக்கு அப்படி ஒரு பிரச்சனைதான் உருவாகியுள்ளது.
'ஸ்பேஸ் ராக் 99942 Apophis' என்ற விண்கல் ஒன்று பூமிக்கு அருகில் நாளை வருவதாக, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் 450*170 மீட்டர் அளவு கொண்டதாகவும், இது பூமி மீது விழுந்தால் சுமார் 100 அணுகுண்டுகள் பூமியில் வெடித்த சேதத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.