எந்த கணவனுமே இதுக்கு ஒத்துக்க மாட்டான் - ரசிகையின் செயலால் மிரண்ட மோகன்!

Mohan Tamil Cinema
By Sumathi Jun 13, 2024 02:30 PM GMT
Report

நடிகர் மோகன் தனது ரசிகை ஒருவரின் செயலை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

நடிகர் மோகன்

மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன். இவரை மைக் மோகன் என ரசிகர்கள் அன்போடு அழைப்பார்கள்.

எந்த கணவனுமே இதுக்கு ஒத்துக்க மாட்டான் - ரசிகையின் செயலால் மிரண்ட மோகன்! | Mohan Shares About Shocking Info On Girl Fan

பின் கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம்,பிள்ளைநிலா என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்தார்.

ராதா, நதியா, ராதிகா, அமலா, ரேவதி என பல முன்னணி நடிகைகளுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, விஜய்யின் தளபதி68 திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில்,

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டேன்? நொந்துபோன குடும்பம் - மனம் திறந்த மோகன்!

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டேன்? நொந்துபோன குடும்பம் - மனம் திறந்த மோகன்!

ரசிகையின் செயல்

ஒரு சமயம் மலேசியாவில் இருந்து விமானத்தில் திரும்பும் போது அங்கு ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தன் மகனுடன் அந்த விமானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அந்த பெண் ரசிகையும் பேசிக்கொண்டு வர அருகில் இருந்த அந்த மகன் தன் அம்மாவிடம் அம்மா அதை காட்டுங்கள் எனக் கூறினார்.

actor mohan

உடனே அந்த பெண் தன் கழுத்தில் இருந்த தாலியை வெளியே எடுத்து அதில் இருந்த லாக்கெட்டை திறந்து காண்பித்தார். அதில் எனது படம். அதைப்பற்றி அந்த பெண் கூறும்போது திருமணம் ஆன புதிதில் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இதை என் கணவரிடமும் நான் காட்டினேன்.

சரி வைத்துக் கொள் என்று கூறினார். அதனால் சாகும் வரை இதை என் தாலியிலேயே வைத்து இருக்கிறேன் என்றார். இதைக்கேட்ட எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இப்படிப்பட்ட கணவரைத்தான் பாராட்ட வேண்டும். இப்படிப்பட்ட ரசிகர்கள் இருப்பதினால் தான் இன்னுமும் சினிமாவில் நிலைக்க முடிகிறது எனத் தெரிவித்துள்ளார்.